1912 இல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் 3னு வீடியோ வெளியானது : மர்மம் துலங்கும் என நம்பிக்கை

 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது பார்ப்பவர்களுக்கு முப்பரிமாண ( 3 D ) தோற்றத்தை வழங்குகிறது. இதனை TLANTIC PRODUCTIONS / MAGELLAN என்ற அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற நூற்றாண்டு கால இரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயோர்க்கிற்கு சென்ற டைட்டானிக்கின் முதல் பயணம் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

முப்பரிமாண வீடியோ குறித்து டைட்டானிக் ஆய்வாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறும்போது,

 “ கப்பலைப் பற்றி இன்னும் பல அடிப்படை கேள்விகள் உள்ளன, அவை பதிலளிக்கப்பட வேண்டும். இந்த ஸ்கேனிங் படங்கள் டைட்டானிக் விபத்தை ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கான முதல் முக்கியப் படிகளில் ஒன்றாகும். இவை ஊகங்கள் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.