ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் பொன்சேகா , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பொது நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டதுடன் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை அண்மையில் பாராளுமன்றத்தில் மறைமுகமாக விமர்சித்ததை தொடர்ந்து கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களை எதிர்கொண்ட சரத் பொன்சேகா ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக சாய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க எதிர்பார்க்கும் உத்தியோகபூர்வ விழா இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே அடுத்து வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சடிபடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.