அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் பலி!

அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.குறித்த பகுதயில் கடந்த நான்கு நாட்களாக மோட்டார் சைக்கிள் பேரணி இடம்பெற்று வருகின்றது.

குறித்த பேரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத நபரொருவரினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.