பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் பரிந்துரை!

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக இதுகுறித்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலுள்ள சுயேட்சை எம்.பி.க்கள் குழுவினைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.