அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி விமர்சித்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் மிததெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் அடங்கிய கொள்கலன்கள், அரசாங்கத்தினால் அண்மையில் எதுவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் உள்ளடங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்களும் பதிவுகளை இட்டுள்ளனர்.
ஒரு சிலர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ்வாறானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.