ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை : சந்திரிக்கா

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், முற்றிலும் தவறானவை என சந்திரிக்கா பண்டாரநாயக்க  தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

“பிரச்சனை இல்லை. இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும். நான் அனுபவித்து விட்டேன்.” இன்று நாடே அதை எதிர்க்கிறது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.