கோட்டாபயவை பிரதமராக நியமிப்பதில் ஆட்சேபனை கிடையாது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியாகவும் போரை வெற்றிகொண்ட அதிகாரியாகவும் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப முடியும் என பிரதீப் உடுகொட தெரிவித்தார்.அவர் நாடு திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதி செய்துள்ளது என்றும் பிரதீப் உடுகொட தெரிவித்தார்.இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் பேசிய மதுர விதானகே, கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக இந்த நாட்டுக்கு வர வேண்டும் என்றும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.