பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக ஆளுநர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மத்திய வங்கி ஆளுநர் இத்தகைய கூற்றுகளை கடுமையாக நிராகரிப்பதோடு பிரதமரும் ஆளுநரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தொடர்ந்தும் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்றனர் என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.