முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை!

முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்  பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமைச்சர் நளீன் ருவன்ஜிவ பெர்னாண்டோவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முட்டை உற்பத்தியாளர்களுடன் பலமுறை கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் வழங்கிய எழுத்துமூல ஆவணத்தின் பிரகாரம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.65 ரூபாயாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது 50 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அநியாயமாக முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலங்களில் கோழி உற்பத்தியாளர்கள் மனித பாவனைக்காக அரிசியை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தினர், ஆனால் இனிமேல் கால்நடை தீவனத்திற்கு தேவையான சோளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் இங்கு தெரிவித்தார்.