வெசாக் கூடு தயாரிப்பதற்காக விகாரைக்கு சென்ற 13 வயது சிறுவனை தவறான முறைக்குட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, சந்தக நபரான மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 27 வயதுடைய தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் களுத்துறை நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளதுடன் சிறுவன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.