விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞன் : அரசாங்கம் இளைஞனை தண்டிக்க கூடாது என கோரிக்கை


விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர்  பகிரங்கப்படுத்தியுள்ளார். தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர அந்த இளைஞனுக்கு எதிராக நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடாது என தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற   விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில்  இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர்  பயன்படுத்தியுள்ளார்.

இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு  விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
 அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள்.
கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.