கொழும்பில் பில்லியன் கணக்கான பணம் மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான பகீர் தகவல்


கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் ஷங்கிரிலா விடுதியில் உள்ள சொகுசு வீட்டில் 1 1/2 வருடங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடுதியில் சொகுசு அறையொன்றை முன்பதிவு செய்து அதில் தங்கியிருந்து சந்தேகநபர் இந்த மோசடியை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வரும் உயரதிகாரிகளுக்கு நாட்டின் உயரடுக்கு நபர்களால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹோட்டல் மட்டுமின்றி, கொழும்பை சுற்றியுள்ள பல சொகுசு அடுக்குமாடி வீடுகளிலும் சந்தேக நபர் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து இதுவரை 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.