கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு பயன்படுத்த வேண்டும் - நிபந்தனை விதிக்காது பேச்சு மேசைக்கு வாருங்கள்!

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள் எனவும் ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விதித்த மூன்று நிபந்தனைகள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“வரவுசெலவுத்திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும். ஆகவே பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள்.

முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள். பேச்சு மேசையில் பேசி, தீர்வு தொடர்பில் முடிவு எடுப்போம். என்ன பிரச்சினை என்றாலும் பேச்சு மூலம்தான் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆகவே கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். கடந்த காலத் தவறுகளை மீண்டும் இழைக்காதீர்கள்”  எனவும் அறிவுரை கூறியுள்ளார்.