மக்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது


கடந்த மே 10ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது இடித்துத் வீழ்த்தப்பட்ட தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்வின் சிலை அதே இடத்தில் இன்று மீண்டும் நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

கடந்த மே மாதம் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது தங்காலையில் அமைந்திருந்த ராஜபக்சாக்களின் தந்தையாரான டி.ஏ.ராஜபக்சவின் சிலை இடித்து தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுடன் சிலை மீண்டும் புத்துயிர் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிலையை வீழ்த்த வந்த திட்டமிட்ட குழுவினர் சட்டத்தின் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.