கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஷ்யாவிடமே இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.