ஊழியரை அடித்துகொலை செய்த கடை உரிமையாளர் : கொழும்பில் பரபரப்பு சம்பவம்


வெள்ளவத்தை  பகுதியில் ஊழியர் ஒருவரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 

 உயிரிழந்த குறித்த நபர் பணிபுரிந்த கடையின் உரிமையாளருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.