உணவகத்தில் ஃபுட் ரிவ்யூவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... இணைத்தில் வைரலாகும் வீடியோ!



உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Food Vlogகிற்காக ரசித்து ருசித்து இப்படி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, எங்கிருந்தோ வந்த கார் மோதி நிலைகுலைய வைத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் ஆகிய இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் பிரபலங்கள்.

இவர்கள் குறிப்பாக உணவகங்களுக்கு சென்று அந்த கடையின் தனித்துவமான உணவுகளை சாப்பிட்டு Review கொடுப்பது இவர்களின் வாடிக்கை. இவர்களின் பக்கங்களை இலட்சக்க கணக்கானோர் பின்தொடர்கின்ன்றனர்.

இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் உள்ள CuVee's Culinary Creations என்ற உணவகத்துக்கு சென்று Food Vlog எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென வந்த கார் ஒன்று உணவகத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக்கொண்டு நினா மற்றும் பேட்ரிக் அமர்ந்திருந்த இருக்கை மீது மோதியது.

இதில் காயமடைந்த இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்ட