பசிலை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது!

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடாத நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது.கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, பசில் ராஜபக்ஷவிற்கு சகமாக கருது வெளியிட்டிருந்தார்.அமைச்சர் பசில் ராஜபக்ஷ எந்தவித அறிக்கையும் வெளியிடாவிட்டாலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் நிதியமைச்சர் கவனத்தில் கொண்டுள்ளதாக வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.அத்தோடு எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா போன்றவற்றின் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படாது என்றும் வசந்த யாப்பா பண்டார குறிப்பிட்டார்.மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை தற்போது பெற்று வருவதாக தெரிவித்த அவர், தற்போது சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவது சாதகமான அறிகுறி என்றும் கூறினார்.