நாடாளுமன்றத்தை கிரிக்கெட்டுன் ஒப்பிட்ட ஆளும் தரப்பு!

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள் இல்லாவிடின் நாடாளுமன்றமும் கிரிக்கெட் போல் மாறிவிடும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.

கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்பட்டதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன், அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் இடைக்கால குழுவை நியமித்தது சரியா? தவறா என்பதை ஆராய அமைச்சரவையில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை என அரச தரப்பின் பிரதான கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதன் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை கிரிக்கெட் குறித்து நான் கருத்து வெளியிட்டேன். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு விதிக்கப்பபட்டுள்ளது.

அதிபர் ஒரு பக்கத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்கிறார், அந்த அதிகாரம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உள்ளது. அதற்கு அமைவாகவே அவர் செயற்படுகின்றார், எனவும் அவர் தெரிவித்தார்.