வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதால் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.மாறாக இந்த நடவடிக்கையினால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மேலும் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏன் அவதானம் செலுத்தவில்லை என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.உக்ரேன் – ரஷ்யா மோதலை தொடர்ந்து பெரும்லான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்முதலை தவிர்த்து வருகின்ற போதும் ஆசிய நாடுகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.எனவே சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசமைப்பு சார்ந்த ஒருசில விடயங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.