50 வயதில் ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.புகையிரத நிலைய அதிபர்!

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டியில் 50 வயது பிரிவில் 90 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.

அப்போட்டியில் கலந்து கொண்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர் (கணக்கு பிரிவின் பிரதான அதிபர்) இராஜநாயகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் வடக்கு மார்க்க புகையிரத நிலைய அதிபர்களில் சிரேஷ்ட அதிபராவர். 31 வருட காலமாக சேவையாற்றி வருகிறார்.

பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுக்கொண்டவராவர்