மக்கள் முன்னணி படுத்துக்கிடந்து செய்யும் 'பம்மாத்து' அரசியல்!!

 த.தே.மக்கள் முன்னணியினர் அண்மைக்காலமாகச் செய்துவருகின்ற அரசியல் அதிரடிகளின் கண்கொள்ளாக் காட்சிகள் சிலவற்றை ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பார்க்க முடிகின்றது.

ஏதாவது காரணங்களைக் கூறிக்கொண்டு எங்காவது போய்ப் படுத்துக்கிடப்பது... அவற்றை வீடியோப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பிரபல்யமாக்குவது…

சும்மா நின்றுகொண்டிருக்கிற பொலிசுக்காரனிட்ட போய் நின்று ‘நான் லோயர்..” என்று அரைகுறை ஆங்கிலத்தில் வீரம் காட்டுவது... அவன் திருப்பிக் கதைக்கிறதை சில அள்ளக்கைகளை வைத்துச் செய்தியாக்குவது.

ஊரவணுடைய காணிகளுக்குள்ள களவாய் உள்நுழைந்து படுத்துக்கிடப்பது... காணிச்சொந்தக்காரன் முறைப்பாடு செய்து, கணிக்குள்ள இருந்த கள்ளனை வெளியே துக்கிக்கொண்டு போகின்ற நேரத்தில.. ‘பொலிஸ் அராஜகம் ஒழிக..’ என்று கத்தி அதனை வீடியோ எடுத்து மூஞ்சிப் புத்தகத்தில போட்டு ‘வீர கொமன்ட்ஸ்..’ எழுதி சுய இன்பம் காண்பது...

அண்மைக்காலமாக த.தே.மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் செய்கின்ற அரசியல் இதுதான். இது மட்டும்தான் தமது அந்தப் படங்களை உள்ளூர் மக்களின் ‘பேஸ் புக்கில்’ பதிவேற்றம் செய்தால் அதுதான் த.தே.மக்கள் முன்னணி செய்கின்ற தமிழ் தேசிய அரசியல்.

சில புலம்பெயர் அடிவருடிகளின் பேஸ்புக்கில் பதிவேற்றினால் அது அவர்கள் செய்கின்ற சர்வதேச அரசியல்.

த.தே.மக்கள் முன்னணியின் ஒட்டுமொத்த அரசியலுமே இப்படித்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

ஊரவன் காணிகளுக்குள் சென்று படுத்துக்கிடந்து பம்மாத்துக்காண்பிக்கும் த.தே.ம.முன்னணி அரசியல்வாதிகளிடம் நாங்கள் கேட்கவிரும்புகின்ற கேள்வி ஒன்றுதான்:

மக்களைத் திரட்டி நடாத்தவேண்டிய மக்கள் போராட்டங்களை எதற்காக தனியாக நின்று நீங்கள் மாத்திரம் செய்கின்றீரகள்?

மக்கள் போராட்டங்களை உங்கள் தனிப்பட்ட அரசில் ஸ்டன்டாக எதற்காக மடை மாற்றுகின்றீர்கள்?

படங்கள், வீடியோக்கள் எடுப்பதற்காக மாத்திரம்தான் இதுபோன்ற போராட்டங்களை நீங்கள் மேற்கொள்ளுகின்றீர்களா அல்லது உண்மையிலேயே தீர்வு ஒன்றை எதிர்பார்த்து உங்களது போராட்டங்கள் அமைந்திருக்கின்றனவா?

தீர்வுதான் உங்கள் நோக்கம் என்றால் ஏன் தமிழ் மக்களை முன்நிலைப்படுத்தி அந்தப் போராட்டங்களை மேற்கொள்ளவில்லை?

ஏன் இதுவரை தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்தவில்லை?

தமிழ் மக்களுக்கான போராட்டங்களுக்கு ஏன் தமிழ் மக்களை துணைக்களைக்கவில்லை?

ஏன் திரள்நிலை அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்?

நீங்கள் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்திவிட்டு உங்கள் சுயவிளம்பரங்ளுக்காக மாத்திரமே உங்கள் அரசியலை செய்கின்றீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

கேள்விகள் தொடரும்..