ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக, உளவுத் துறைக்கு தகவல் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராணுவ வீரர்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியை கண்காணிப்பதற்காக இராணுவத் தளபதி உள்ளிட்ட பலர் விமானத்தில் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியுள்ளது.
விமானத்தில் சிரேஷ்ட இராணுவத் தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உட்பட 11 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூடோ மற்றும் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலு{ஹ உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            