இலங்கையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையாகும் திட்டம்!

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்கும் திட்டம் இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், நாட்டில் தற்போது எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய காலப்பகுதியில் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையாகும் திட்டம்! அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

இதன்காரணமாக அரச நிறுவனங்களினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்து மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையாகும் திட்டம்! அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

இதன்படி, அரச நிறுவனங்களின் பிரதானிகளின் அனுமதியுடன் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்க முடியும்.

மேலும், அத்தியாவசிய அரச சேவைகளைப் பேணுவதற்கு இந்த செயற்பாடு தடையாக இருக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.