உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சற்றுமுன் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.