இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது- இந்தியா

இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது என்பது இந்தியாவின் கருத்தhகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் நிதி மறுசீரமைப்பை மேற்கொள்ள இந்தியா கூடுதலாக உதவும் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்திய ஊடகம் ஒன்றிடம் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில்இ இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள் உதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி மேலும் தொடரும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது மிகவும் இன்றியமையாத பகுதியை கடந்து செல்கிறது. அவர்கள் தங்கள் சொந்த அரசியலமைப்பு விதிகளின் மூலம்இ மீதமுள்ள காலத்திற்கு சேவை செய்ய ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தநிலையில் இந்தியா எல்லா நேரங்களிலும் இலங்கையுடனான தமது உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அத்துடன் இலங்கைக்கு கூடுதல் நிதியை வழங்குவதைத் தொடர விரும்புவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடக்கும் போராட்டங்களை பற்றி பேசுவது பொருத்தமானது அல்ல. இதில் தனியாட்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சில நிலைகள் இருக்கலாம்.

இலங்கையுடனான இந்தியாவின் கடல்சார் உறவுகள் இன்றியமையாதவை எனினும் அது வெறுமனே இந்தியாவின் பாதுகாப்பை மாத்திரம் மையப்படுத்திய விடயம் அல்ல என்று கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இங்கு நடந்தன. இதன்போது பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சவால்களை ஒத்துழைப்புடன் கையாள்வதை உறுதிசெய்ய இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒத்துழைப்பு இருந்தது.

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் இலங்கையர்களின் அபிலாஷைகளின் மூலம் இலங்கையின் கட்டமைப்பிற்குள் ஒரு தெளிவான நிபந்தனை உள்ளது.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.

அரசியல் நிகழ்வுகளுக்கு மேலதிகமாக தமிழ் மக்களுடன் நேரடி உரையாடல்களை நடத்துவதற்கும் எதிர்காலத்தில் ஒரு அணுகுமுறையைக் காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் இந்திய வம்சாவளித் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்புடன் இந்தியா செயற்பட்டு வருகிறது.

அண்மைக் காலத்தில் இலங்கை. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பணியாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.