ரணிலை சந்திக்க இரவோடு இரவாக சிறைச்சாலைக்குச் சென்ற அரசியல்வாதிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடல் நலக் குறைவின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்;றிரவு அவரை பார்சையிடச் சென்ற அரசியல்வாதிகளை உள்ளே செல்ல சிறைக்காவலர்கள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர்  நேற்று (22) இரவு  ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு அரசியலாவதிகள் பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டை சரிவிலிருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாக கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதேநேரம் இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலத்தில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது. எனவே, இது தொடர்பில் அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்று யூடியூப் சமூக வலைத்தளக் கணக்கை கொண்ட ஒருவர் எவ்வாறு முன்கூட்டியே உறுதியாகக் கூறினார்? அவரது இந்த கணிப்பு நிச்சயம் தற்செயலான ஒரு கணிப்பாக இருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும். அதனாலே யூடியூப் அலைவரிசையாளர் ரணில் விக்கிரம சிங்க கைது செய்யப்படுவாரென ஏற்கனவே அறிவித்திருந்தார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி வித்தார்.
 
இதேநேரம் நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொது வானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடு கிறார்கள். இது உண்மையா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வாக்குமூலமளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யூடி யூபர் சுதா என்பவர் குறிப்பிடுகிறார். யூடியூபர் சுதா நீதிபதியா? யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துக ளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது. இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நாட்டின் மூன்றாம் பிரஜையான பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் பொது நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார். அவ்விடத்தில் வைத்து இந்தச் சுதா என்பவர் பிரதமர் தோளில் அடித்துப் பேசியுள்ளார். இது வெட்கத்துக்குரிய செயற்பாடு,  நாட்டின் மூன்றாம் பிரஜையிடம் இவ்வாறாக நடந்து கொள்வது. 'நாயுடன் உறங்கினால் உன்னிகளுடன் எழும்ப வேண்டும்' என்ற பழமொழி உள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் எனவும் சாமர சம்பத் குறிப்பிட்டார்.

இதேநேரம் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.