மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய காரணம்!

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் குற்றம் சாட்டினார்.வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மோசடி, தனியார் வங்கிகளிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றுக்கொண்டமை என்பனவே இந்நிலைக்கு காரணம் என கூறினார்.மேலும் மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைத்தமை மூலம் அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றம் சாட்டினார்.இதேவேளை தனது ஆட்சி காலத்தில் மோசடிகளுக்கு இடமளிக்காதமையினாலேயே யுத்தத்திற்கு மத்தியிலும் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.தனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள், ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் இதன் காரனாகவே ராஜபக்ஷவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.