தமிழ் பெண் ஆசிரியையின் தங்க சங்கிலியை அறுத்த இளைஞனை நன்கு கவனித்த பிரதேசவாசிகள்


ஹட்டன் நகரில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் ஆசிரியை (18) பாடசாலை முடிந்து பக்க வீதி ஊடாக ஹட்டன் நகருக்குள் சென்றவேளை ஆசிரியையின் தங்க நகையை அறுத்துக்கொண்டு ஓடிய இளைஞனைப் பிடித்த பிரதேசவாசிகள்  நன்கு கவனித்த பின்னர் ஹட்டன் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

நேற்றையதினம்(18) பாடசாலை முடிந்து மதியம் 2:00 மணியளவில் ஆசிரியை வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது, ​​பின்னால் வந்த வாலிபர், ஆசிரியையின் கழுத்தில் இருந்த சுமார் மூன்று பவுண் தங்க நகையை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

ஹட்டன் நகரின் நடுப்பகுதியினூடாக நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது, ​​சந்தேகநபரான இளைஞனைப் பிடித்த பிரதேச வாசிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் பிடிபடும் போது தங்க நகையை தூக்கி எறிந்து அல்லது விழுங்கியிருக்கலாம் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சுமார் 30 வயதுடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பிரதேசவாசிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த போது, ​​சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரதேசவாசிகளின் மற்றுமொரு குழுவினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறைக்கும் அவர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.