நாட்டை வந்தடைந்தது டீசல் ஏற்றிய இறுதி கப்பல்!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.இதன்மூலம் 40000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளது.எவ்வாறாயினும் குறித்த கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் வரிசைகளில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிகின்றது.