சந்தையில் பரிமாற்றப்பட்ட மொத்த டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!


அண்மைய நாட்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த வாரம் சந்தையில் பரிமாற்றம் செய்யப்பட்ட டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த வாரம் 500 மில்லியன் டொலர்கள் சந்தையில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.