காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பிற்பகல் காலி முகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
எனினும் போராட்டக்காரர்கள் அதற்கு உடன்படாததால், அங்கு திரண்டிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின்போதே நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            