கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் பதிவு!

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில் 9.1 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதுடன் 6ம் திகதிவரை மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்க கூடியதாகவுள்ளது வடக்கு வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி லீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இந்த மழையுடனான கால நிலை 6ம் திகதிவரை தொடர்ந்து காணப்படும் 7ம் திகதி 8ம் திகதிகளில் படிப்படியாக குறைந்து 9ம் திகதி மீண்டும் மழைவீழ்சி அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.