டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள்ள லக்ஸந்த செவன குடியிருப்பு வளாகத்தில் வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த டேன் பிரியசாத் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
பின்னர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டபர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டேன் பிரியசத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முக்கிய சந்தேக நபரின் கைது, விசாரணைக்கு முக்கிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.