600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு!

அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல் இன்று அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்த நிலையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.நுகர்வோர் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2020 இல் 3401.66 மில்லியன் டொலரில் இருந்து 2021 இல் 3848.71 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.