அலரிமாளிகை முன் ஒன்று குவிந்த பொது மக்கள்! காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் முறுகல்


இரண்டாம் இணைப்பு 


அலரி மாளிகைக்கு முன்னாள் போரட்டத்தில் ஈடுபடும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அலரி மாளிகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் பதற்ற நிலை நீடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



முதலாம் இணைப்பு 


ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

நேற்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் விதமாக, அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், அலரிமாளிகைக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்றைய தினம் மைனாகோகம என்ற பெயரில், தங்களின் போராட்டக் களத்தை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகிறது.