பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் : தீர்மானத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு



முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த சந்திப்பின் போது கட்சியின் உயர்மட்ட குழுவினர், பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்ட போதிலும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷ முதலில் பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.