யாழில் நடுவீதியில் முகத்தை மறைத்து வழிமறித்த கும்பல் - இளைஞன் மீது கோடாரியால் சரமாரியாக வெட்டு..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இளைஞர் ஒருவர் மீது கோடாரி வெட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் மீதே கோடாரி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்தை மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடரியால் குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயத்துக்குள்ளாகி, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.