கை பம்பை தும்பிக்கையால் அடித்து காவலரின் தாகம் தணித்த யானை
கோடை வெயிலில் வாடி கொண்டிருந்த தன் எஜமானுக்கு யானை ஒன்று தனது தும்பிக்கையால் கை பம்பை அடித்து தாகம் தணித்துள்ளது.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் அஹேரி தாலுகா கமலாபூரில் உள்ள யானை பூங்காவில் இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.
பூங்காவில் உள்ள கை பம்பை யானை தும்பிக்கையால் அடித்தபோது, காவலர் சுதீப் தண்ணீர் குடித்து தாகம் தணித்தார்.