நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் – ருவான் விஜயவர்தன

தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, மிக மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு மீள வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டும் என ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

கடந்த காலங்களை போன்று மதம் மற்றும் இன ரீதியாக பிரிந்திருந்து நாட்டை முன்னோக்கிச் கொண்டு செல்ல முடியாது என்றும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டார்.