வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர்

தன்னை பற்றிய வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது சீன அதிபர் ஜின்பிங் தோன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக பொது வெளியில் ஜின்பிங் தோன்றி உள்ளதால், சீனாவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக இணையத்தில் வலம் வந்த தகவல்கள் வதந்தி தான் என்பதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

பொதுவாக, சீனாவில் பொது நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொண்டாலே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தி கொள்வார் என்றும், உஸ்பெகிஸ்தான் வரை சென்று வந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான், அவர் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், சீனாவில் இராணுவ ஆட்சி அமைக்க உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.