டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( செப்டம்பர் 05 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 358 ரூபா 05 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 369 ரூபா 02 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 425 ரூபா 20 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 408 ரூபா 51 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 352 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.