பதில் அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறித்துள்ளதையடுத்து, பதில் அதிபர் தெரிவு தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் கோட்டாபய தனது பதவி விலகலை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ கடிதத்ததை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.

அதனையடுத்தே இன்று காலை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக ஊடக சந்திப்பின் மூலம் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அரசியலமைப்பிற்கமைய பதில் அதிபர் நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ச, தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு நேற்று மாலை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஊடாகவே பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் எடுத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.