சர்வதேச நாணயநிதிய கடன் வசதி தொடர்பில் ஆளுநர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!


சிறிலங்காவிற்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவை சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த இலக்கை இழந்தால், 2023 ஜனவரியில் அதை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.