வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி - கொழும்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போராட்டம்!


13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன் முறுகலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் சிலர் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.


இணைப்பு - 1


அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பில் தற்போது பௌத்த தேரர்கள் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.

தேரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் அவர்களை தடுக்க முற்பட்டமையினால் காவல்துறையினருக்கும், தேரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில், தேரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


தேரர்கள் மீது கை வைக்க வேண்டாம்

காவல்துறையினருக்கும், தேரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து தேரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் “தேரர்கள் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.