கொழும்பில் இன்று அதிகாலை பயங்கரம் - சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

 


கொழும்பு - கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

 
இறந்தவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

கொலையைச் செய்த சந்தேக நபர்கள் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.