கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் - இராணுவம் உதவிக்கு அழைப்பு

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றமான சூழல் தொடர்கிறது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளது.