தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆலய குருக்கள் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவிலடி பகுதியில் குருக்கள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரநாதக்குருக்கள் சபாரத்தின தேசியர் (வயது 76) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குருக்களின் சடலம் மரண விசாரணைகளையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.