கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் உள்ள எமது செய்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இந்தப் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
பின்னர் லோட்டஸ் சுற்றுவட்டத்தை அடைந்து நிதியமைச்சின் அலுவலகத்துக்குச் செல்ல முற்பட்ட போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களை வெளியேற்றுவதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.