ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க கொட்டும் மாலையிலும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் !

 கடும் மழைக்கு மத்தியில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி காரணமாக மருதானையில் இருந்து தொழில்நுட்ப சந்தியில் வரையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) பிற்பகல் மருதானையில் இருந்து இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.